ஹாப்பி பர்த்டே
பணக்கார வீட்டு, மூணு வயசு..
பாப்பாவுக்கு பிறந்தநாள்....
ஊரே மெச்சும் அளவிற்கு...
ஊர் பொதுவிடத்தில் அன்னதானம்...
தானம் ஆரம்பிக்கும்முன்...
தன் குழந்தையை ஒவ்வொருவரும்...
தன் வாயாற வாழ்த்தி...
வயிராற சாப்பிடவேண்டும்...
இது
அந்த அப்பாவின்...
அன்புக்கட்டளை...
சிறிது நேரத்தில்...
கூட்டம் கூடியது...
சொந்தம், பந்தம்,
தெரிந்தவர், தெரியாதவர்,
ஏழை, பணக்காரர்...
என
ஒரு மையில் தூர நீளவரிசை...
அண்டா அண்டா வாக...
எழுமிச்சை மற்றும் புளி சோறு...
அண்டா அருகில்,
அந்த மூணுவது பாப்பா...
உணவை வாங்குபவர் அனைவரும்...
ஹாப்பி பர்த்டே...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நோய் நொடியில்லாமல் வாழணும்...
நூறு வயசு வரைக்கும் வாழணும்...
என்று வாழ்த்த...
வெகு நேரம்...
மேல்ச் சட்டையும்...
கால்ச்செருப்பும் இல்லாமல்...
கால் வலிக்க...
அந்த ஒருவேளை உணவிற்காக...
காத்திருந்த...
ஐந்து வயது ஏழைச்சிறுவனிடம்
குழந்தையின் அப்பா சொல்கிறார்...
"பாப்பாக்கு ஹாப்பி பர்த்டேன்னு சொல்லுங்க"
என்று...
ஒரு நிமிடம் யோசிச்சப்பின்...
அந்தச் சிறுவனின்...
வாயிலிருந்து...
வந்த வார்த்தை...
"நாளைக்கும்...
ஹாப்பி பர்த்டே கொண்டாடுவீங்களா...?"
இன்றும் நிலவுகிறது...
இது போன்ற நிலை...
வல்லரசாக துடிக்கும்...
இந்தியாவில்...