ஔடத அட்சயம்
இடிந்து போன
என் தோட்டத்து மாளிகை
என்ன கொள்ளை அழகு
ஆழத்தைப் பறைசாற்ற
ஆங்காங்கு
நீளத்தால் கோடிட்ட
அடிவளவுக்கிணறு
அடுக்கடுக்காய் பிள்ளை
ஆரோகண எல்லை
இடை இடையே தோடை
ஈறுகளில் மாதுளை
உயர்ந்த வேம்பு
ஊஞ்சல் விலாட்டு மா
எல்லை நிறைத்த முருங்கை
ஏறி விழுந்த கொய்யா
ஒற்றைத் தேக்கு
ஓங்கிய பனைகள் அது ஓர்
ஔடத அட்சயம்
வாடையும் தென்றலாகும்
கோடையும் இனிமையாகும்
பன்றி முயல் விசாரித்துப்போகும்
நண்டு வந்து வரைபடம் கீறும்
ஆகா ஆகா என்னே இனிமை
ஆகாயம் கீழே எண்ணங்கள் ஓடும்
குந்திலே குந்தி சந்தியை நோக்கும்
பொந்திலே முடங்கி பாம்பும் உறங்கும்
ஓலைகள் மூடிய மாளிகை
செம்மண் தீட்டிய குளிர்மை
சாணியால் தடவிய மென் தரை
அம்மா போட்ட அழகான கோலம்
அப்பாவின் ஆறுதல் இருக்கை
அப்பப்பா. ...
அப்படியே வாழ்ந்து விட. ....