திமிர் அடக்கு
என்ன இது
இருபத்து மூன்றரை பாகை
சரிவை காணவில்லை
எங்கே போனது அது ?
கைப்பற்றி விட்ட கணக்கில்
நிமிர்ந்து விட்டதோ
களவும் கையுமாக
அமிழ்ந்து சுட்டதோ
பொத்திப் புதைத்து
சிதைந்து கெட்டதோ
தன் மார்பு தட்டி என்னைப் பார்
என்கிறது. ...
முடியாது
நீ
மடிந்து விடப் போகிறாய்
இன்றோ நாளையோ
உன் இருப்பு
இல்லாதெனப் போகிறது
அனுபவி
அறிவு கொண்டு நிறை
கொடுத்துப் பகிர்
கோவணத்தில் முடியாதே
இன்று உனக்கு
நாளை எனக்கு
மாற்றம் எடு
ஏற்றம் கொடு
மண் மணக்கும்
சீற்றம் கொள் - பிசாசே
சீறிக் கொல்லாதே -உன்
திமிர் அடக்கு !