சிகப்பு விளக்குகள் --முஹம்மத் ஸர்பான்

முறையற்ற இச்சையால்
இன்பம் கண்டாய் என்று எண்ணாதே!
உன் யாக்கையை அழிக்க
உதிரம் ஒத்திகை பார்ப்பதாய் புரிந்துகொள்!

காமத்தின் மறைவிடங்கள்
பாவத்தால் சீல் படிந்து உக்கி
உன் உடலெல்லாம் புண்ணாய் போகும்.
ஈன்றோரும் கிருமி என்று
தட்டிக்களிப்பார்;மனையாளும்
நீ தொட்டால் ஐயத்தால் எட்டி உதைப்பாள்
தலை நிமிர்ந்து வாழ்ந்த சமுதாயம்
நாய் என்று கருதி கல் வீசும்.

உணவில்லாமல் உடல்
வரண்டு நிர்வாணம் கொண்டவனும்
உன்னை விட அழகாய் தெரிவான்

மண்ணின் மேல் சிறுகற்கள் போல
உன் தோற்றமெல்லாம் அசிங்க
பருக்கள் கோளமிடும்.,மாட்டின்
சாணியும் உன்னை விட பெறுமதியாகும்

வாழும் வரை இருளுக்குள் ஒளிந்து
நிலவிற்கும் அஞ்சி வாழ்வாய்.
கண்ணாடியில் உன்னை பார்த்து
அம்புலி என்று பயந்து சத்தமிடுவாய்.

ஆசைக்கு பெண்ணை வேட்டையாடினாய்
காலமும் உன்னை இரையாக்கியது
காமமென்ற நஞ்சை நெஞ்சிலிருந்து நீக்கு
இச்சை எனும் சிகப்பு விளக்கும் அணைந்துவிடும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (1-Dec-15, 9:42 am)
பார்வை : 113

மேலே