விவசாயம்
விவசாயி
விழை நிலங்களில்
விதை விதைத்தான்
பயிர்கள் விழைந்தன..
அன்று...
வியாபாரி
விழை (லை) நிலங்களில்
கற்களை விதைத்தான்
கட்டிடங்கள் விழைகின்றன
இன்று...
உணவிற்கான விவசாயத்தை விட்டு
உல்லாசத்திற்காக வீடு கட்டி
எதனை உண்ண போகிறாய் மனிதா?
அடிப்படையான விவசாயத்தை விட்டுவிட்டு
ஆடம்பரமான வாழ்க்கை எதற்கு?
பசுமையான மரத்தினை
நடுபவனுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை..
மரத்தினை அழிப்பவனுக்கு பண மதிப்பு கொடுக்கிறது நம் சமூகம்..
மரம் நடுபவருக்கு பண மதிப்பு கொடுத்து பாருங்கள்
நம் தேசம் பசுமையான தேசமாக என்றும் இருக்கும்...