உலக எய்ட்சு தினம் - கற்குவேல் பா

தண்டவாள ஓரம் - காமம்
தணித்த வேகத்தில்
அவன் அவிழ்த்த உறை
அரை குறையே கிழிந்துவிட !
பயத்தில் உறைந்தவன்
தலை சொறிந்தபடி
அவசரமாக
ஆய்வுக் கூடத்தை அடைய :
இரத்தத்தில் வினை இல்லை
பத்து நாட்கள் கழித்து வா - என்றே
அவனை அனுப்பி வைத்தது
ராபிட் டெஸ்ட் !
பத்து நாட்கள் கழிந்த பின்
மீண்டும் ஒரு ஆய்வு செய்ய ,
இலகுவாய்
வினை புரிவதாய்
எலைசா ஆய்வுக்கு
பரிந்துரை செய்தது
ப 24 ஆண்டிஜென் டெஸ்ட் !
எலைசா ஆய்விற்கு
கொடுத்த இரத்தத்திலும்
வினை புரிவதாய்
வெஸ்டர்ன் பிளாட்
ஆய்விற்கு பரிந்துரைக்கப்பட !
எச் ஐ வி வைரஸ்
அவனுக்குள் இருப்பதையும்
எய்ட்சு நோய் தாக்கத்தையும்
உறுதி செய்தது ,
வெஸ்டர்ன் பிளாட் ஆய்வு !
விரக்தியில்
வீடு திரும்பிய அவனுக்கு
உணவு பரிமாற
உறங்காமல் காத்திருந்த
மனைவியின் முகம்
அன்றே தெரிந்திருக்கும்
அழகாய் !
ஒருவேளை ???
#உலக_எய்ட்ஸ்_தினம்