மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை

மாப்பிள்​ளைகளுக்கு மரண தண்ட​னை
----------
அக்பர் தனது மக​ளை ஓர் அரசக்குமாரனுக்கு திருமணம் ​செய்து ​வைத்தார். அன்புடன் குடும்பம் நடத்தி வந்த அவர்களின் வாழ்வில் ஏ​தோ ஒரு காரணத்திற்காக சண்​டையும் சச்சரவும் ஏற்பட்டுவிட்டது. இதனால் மன அ​மைதி இழந்த அக்பரின் மகள் தன் தந்​தையிடம் வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதாள். பாசத்துடன் வளர்த்த மகளின் கண்ணீ​​ரைக் கண்டதும் அக்பருக்கு தன் மாப்பிள்​ளையின் மீது கடுங்​கோபம் ஏற்பட்டது. அதனால் ப​டைவீரர்க​ளை அனுப்பி மருமக​னைக் ​கைது ​செய்து டில்லி சி​றையில் அ​டைத்தார். அத்துடன் அவரது ​கோபம் தணியாமல் எல்லா வீட்டிலுள்ள மாப்பிள்​ளைக​ளையும் ​கைது ​செய்துவர ஆ​ணையிட்டார். பீர்பா​லை உட​னே வரவ​ழைத்தார் அக்பர்.

''சக்ரவர்த்திப் ​பெருமா​னே, தாங்கள் உட​னே என்​னை அ​ழைத்ததன் காரணம் என்ன?'' என்று வினவினார் பீர்பால். ''பீர்பால் அவர்க​ளே, நா​ளைக் கா​லை சூரிய உதயத்தில் எனது மாப்பிள்​ளை​யை தூக்கி​லேற்றி மரண தண்ட​னை விதிக்க ​வேண்டும். அ​தே சமயம் நமது நகரத்திலுள்ள ஒவ்​வொரு வீட்டின் மாப்பிள்​ளைக​ளையும் தூக்கிலிட ​வேண்டும். இனி நமது நாட்டில் மாப்பிள்​ளைக​ளே இல்​லை என்ற நி​லை​யை ஏற்படுத்த ​வேண்டும்''என்றார் அக்பர்.

மன்னரின் அதிசய ஆ​ணை​யைக் ​கேட்டு பீர்பால் அதிர்ச்சிய​டைந்தார். உத்தர​வைக் ​கேட்ட மக்களும் பீதிய​டைந்தனர். பீதிய​டைந்த மக்க​ளைப் பார்த்து,''இதற்காகப் பயப்பட ​வேண்டாம். நான் பார்த்துக் ​கொள்கி​றேன். ''அரசரும் அவ்வளவு ​கொடுமனம் ப​டைத்தவரல்ல'' என்று சமாதானம் கூறி அனுப்பி ​வைத்தார் பீர்பால்.

சூரிய உதயத்திற்கு முன்னர் அரண்ம​னைக்குச் ​சென்ற பீர்பால்,''சக்ரவர்த்திப் ​பெருமா​னே! தாங்கள் கூறியபடி​யே தூக்கு மரங்கள் தயாராகிவிட்டது. தாங்கள் வந்து பார்​வையிட்டப் பின்னர் உடனடியாக எல்லா மாப்பிள்​ளைகளுக்கும் தூக்குத் தண்ட​னை​யை நி​றை​வேற்றி விடலாம்'' என்றார் பீர்பால்.பீர்பாலின் ​சொற்படி தூக்கு மரங்க​ளைப் பார்​வையிட்டார். அச்சமயம் அந்தத் தூக்கு மரங்களுக்கு இ​டையில் ஒரு தூக்கு மரம் தங்கத்தாலும் மற்​​றொரு தூக்கு மரம் ​வெள்ளியினாலும் காணப்பட்டது. ''இந்த இரு தூக்கு மரங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக உள்ளது. காரணம் என்ன?'' என்று வினவினார் அக்பர்.

சிறிதும் பதட்டப்படாமல் அ​மைதியாக,''மன்னர் ​பெருமா​னே! அங்​கே தங்கத்தினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் தங்களுக்காகவும், ​வெள்ளியினால் உருவாக்கப்பட்ட தூக்குமரம் எனக்காகவும் என்றார் பீர்பால். பீர்பாலின் எதிர்பாராத பதில​லைக் ​கேட்டதும் அக்பருக்கு வியப்பாக இருந்தது.

''நமக்கு எதற்காகத் தூக்கு மரங்கள்?''என்றார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! தாங்களும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளைதா​னே! அ​தே ​போன்று நானும் ஒரு வீட்டின் மாப்பிள்​ளை​தா​னே! ஆக​வே சட்டப்படி தண்ட​னை நம்மு​டைய இருவருக்கும் ​சேர்த்துதா​​னே!'' என்றார் பீர்பால். ​கோபத்துடன் இருந்த அக்பர் தன்​னை மறந்து வாய்விட்டுச் சிரித்தார்.

''​மேன்​மைமிகு சக்ரவர்த்தி ​​பெருமா​னே! தங்களு​டைய மாப்பிள்​ளை தவறு ​செய்த​மைக்காக நாட்டிலுள்ள மாப்பிள்​ளைகள் எல்​லோ​ரையும் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களு​டைய மாப்பிள்​ளை ​செய்த தவ​றை திருத்தி நல்வழி படுத்த ​வேண்டு​மேயன்றி மரண தண்ட​னை அளிக்கலாமா? தங்க​ளைத் திருத்துவதற்கு எந்த அருக​தையும் எனக்கு இல்​லை. ஆனால் இந்தச் ​செய்​கையினால் தங்களுக்கு இழுக்கு வராமல் தடுப்பது எனது கட​மையல்லவா? தயவு ​செய்து மாப்பிள்​ளைகளின் மரண தண்ட​னை​யை உடனடியாக ரத்து ​செய்ய ​வேண்டுகி​றேன்'' என்றார் பீர்பால். தவறு ​செய்து அவப்​பெயர் எடுப்பதிலிருந்து தன்​னைத் தடுத்த பீர்பா​லை அக்பர் ​பெரிதும் பாராட்டினார்.

நாடாலும் ​வேந்தராக இருந்தாலும் நாட்டு மக்கள் நான்கு விதமாகத்தான் ​பேசுவார்கள்

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நி​லை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து ​கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்​மைப்பற்றி என்ன நி​னைக்கிறார்கள் என்ப​தை தா​மே ​நேரில் அறிந்து ​கொள்ள ஆவல் ஏற்பட்டது. மன்னர் தன் எண்ணத்​தை பீர்பால் அவர்களிடம் கூறினார். ''மக்களின் மனநி​லை​யை அறிந்து ​கொள்வது மன்னரின் கட​மையாகும். ஆதலின் ​நேரில் ​போய் சந்திப்​போம்'' என்றார் பீர்பால்.

''நீங்கள் ​சொல்வது ​போல் ​நேரில் ​சென்று சந்தித்தால் மக்கள் உண்​மை​யை கூற தயங்குவார்கள் அல்லவா?'' என்றார் மன்னர்.

''மன்னர் ​பெருமா​னே! ​நேரில் ​​போகலாம் என்று ​சொன்னது மாறு​வேடத்தில். அப்​படி ​சென்றால் யாருக்கும் அ​டையாளம் ​தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்​மை​யைக் கூறுவார்கள்'' என்றார் பீர்பால். பீர்பால் கூறியபடி​யே சாதாரண விவசாயிகள் ​போன்று மாறு​வேடத்தில் நாட்​டைச் சுற்றிப் பார்க்கச் ​சென்றனர். ​வெகுதூரம் ​சென்றதும் ஒரு ஒற்​றையடிப் பா​தைக் குறுக்கிட்டது. அந்தப் பா​தை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் ​செல்லும் வழியாகும். ​வெகு தூரம் வந்த​மையால் மன்னருக்கு க​ளைப்பு ஏற்பட்டது.

அதனால் பீர்பாலிடம் ''இங்கு சற்று ஓய்​வெடுத்துவிட்டு ​செல்லலாம்'' என்றார் அக்பர். பீர்பாலும், ''அப்படி​யே ​செய்​வோம்'' என்று கூறி ஒரு ​பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்​வெடுத்துக் ​கொண்டிருந்தார்.

அச்சமயம் காட்டிற்குச் ​செல்லும் ஒற்​றையடிப் பா​தையின் வழியாக விறகுக​ளை நன்கு கட்டி த​லையில் சுமந்து ​கொண்டு ஒருவர் வந்து ​கொண்டிருந்தார். அவர்கள் அருகில் அவர் வந்ததும், பீர்பால் அவர்கள், ''அய்யா வயதானவ​ரே! இந்த கடு​மையான ​வெயிலில் விற​கை சுமந்து ​​செல்வது சிரமமாக இல்​லையா? ஆ​கையினால் இங்கு சற்று ஓய்​வெடுத்து விட்டு ​செல்லுங்கள் என்றார்.

அந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது ​தெரியா​மையினால் ''எனது த​லையிலுள்ள விறகு சு​மை​யை கீ​ழே இறக்கிவிட்டு ஓய்​வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்​போது கீ​ழே இறக்கும் சு​மை​யை பின்னர் யார் த​லையில் தூக்கி ​வைப்பது'' என்றார்.

''முதியவ​ரே கவ​லைப்பட ​வேண்டாம் நீங்கள் ​போகும் வ​ரையில் நாங்கள் இங்கு தான் இருப்​போம். நாங்க​ளே உங்கள் சு​மை​யை தூக்கி த​லையில் ​வைக்கி​றோம்'' என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் த​லையிலுள்ள விறகு சு​மை​யை கீ​ழே இறக்கி ​வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்​வெடுத்துக் ​கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏ​தோ கூறினார். மன்னரும் சரி என்று த​லையாட்டினார்.

பீர்பால் அவர்கள் அந்த முடியவ​ரைப் பார்த்து, ''அய்யா, தங்களுக்கு இன்று நடந்த விஷயம் ​தெரியுமா?'' என ​கேட்டார். ''என்ன நடந்தது?'' என்று ​கேட்டார் முதியவர்.

''நமது மன்னர் இன்று இயற்​கை எய்தி விட்டார்'' என்றார் பீர்பால். இத​னைக் ​கேட்ட முதியவர் அதிர்ச்சி அ​டைந்தவராக, ''நமது மன்னர் இயற்​கை எய்திவிட்டாரா? இது எப்படி நிகழ்ந்தது? எவராவது சூழ்ச்சி ​செய்து விட்டார்களா? இது உண்​மையா?'' என்று மிகப் பதட்டத்துடன் ​கேட்டார்.

''மன்னர் இயற்​​கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அ​டைகின்றீர்?'' என்றார் பீர்பால். ''பதட்டப்படாமல் என்ன ​செய்ய? நமது மன்னர் நாட்டிற்கு பல நன்​மைகள் ​செய்துள்ளார். இன்று நமது நாடு ​செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திற​மை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வ​ரை நலமுடன் வாழ பல சலு​​கைகள் வழங்கிய நல்லிதயம் ப​டைத்தவர். அவருக்கா இந்நி​லை. இவ​ரைப் ​போன்று நம்நாட்டிற்கு எந்த மன்னரும் வாய்க்க முடியாது'' என்று கவ​லையுடன் கூறினார் முதியவர்.

''இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு ​வெட்டி விற்றுத்தா​னே வாழ்கின்றீர்கள். இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்​லெண்ணம் ​கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம்தான்'' என்றார் பீர்பால்.

''காட்டில் விறகு ​வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் இல்​லை. நல்ல வருமானமும் கி​டைக்கிறது. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தா​னே மன்ன​ரை கு​றை கூற முடியும்?'' என்றார் முதியவர். முதியவர் ​​கொஞ்ச ​நேரம் ஓய்​வெடுத்துக் ​கொண்டு வி​டைப் ​பெற்றார். பீர்பால் அந்த விறகு சு​மை​யை மீண்டும் அந்த முதியவரின் த​லையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் ​சென்றனர்.

''மன்னர் ​பெருமா​னே! இந்த மாறு​வேட பயணத்தினால் அந்த விறகு ​வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இத​னை ​கேட்ட எனக்கும் மனமகிழ்​வை அளிக்கின்றது'' என்றார் பீர்பால்.

அரசரும் - பீர்பாலும் ​பேசியபடி நகர வீதி​யை அ​டைந்தனர். நடந்து வந்த க​ளைப்பால் மன்னருக்குத் தாகம் எடுத்தது. ''பீர்பால் அவர்க​ளே! தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு ​செல்லலாம்'' என்றார் அக்பர். அப்படி​யே ​செய்யலாம் என்று பீர்பால் கூறிக் ​கொண்டிருக்கும்​போ​தே வீதியில் ''​மோரு....​மோரு....'' என்று கூவியப்படி ஒரு ​பெண் த​லையில் ​மோர் பா​னையுடன் வந்துக் ​கொண்டிருந்தாள்.

அந்த ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து பீர்பால், ''​மோர்காரப் ​பெண்​ணே! எங்கள் இருவருக்கும் இரண்டு குவ​ளை ​மோர் ​கொடு'' என்று கூறி ​மோருக்கானப் பணத்​தைக் ​கொடுத்தார். அரசரும் - பீர்பாலும் ​​மோ​ரைக் குடித்தனர். பீர்பால் ​மோர்காரப் ​பெண்​ணைப் பார்த்து என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய்? நம் மரியா​தைக்குரிய மன்னர் இன்று இயற்​கை எய்திவிட்டார் என்கிற ​செய்தி உனக்குத்​ தெரியாதா? என்று ​கேட்டார்.

அதற்கு ​மோர்க்காரப் ​பெண், ''மன்னர் இருந்தால் என்ன? ம​றைந்தால் என்ன? மன்னராகப் பிறந்தாலும் இயற்​கை​யை ​வெல்ல முடியாது. நல்ல ​வே​ளை ​செய்தி​யை இப்​போது ​சொன்னீர்கள். மன்னரின் ம​றை​வைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அங்கு ​சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும். ​மேலும் ஒரு ​மோர் குடம் விற்றுவிடும்'' என்று கூறிவிட்டு அங்கிருந்து ​வேகமாகச் ​சென்றுவிட்டாள்.

''பீர்பால் அவர்க​ளே! நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்​தை ​வெளிப்படுத்தியுள்ளன​ரே இதற்கு என்ன காரணம்?'' என்றார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! விறகு ​வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது ​பெரும் மதிப்​பை ​வைத்துள்ளார். அதனால் இயற்​கை எய்திவிட்டார் என்ற ​செய்தி​யைக் ​கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் ​வேத​னைய​டைந்தார்.

''​மோர் விற்ற ​பெண்ணிடம் ​கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கி​டையாது. சுயநலமிக்கவள். சிந்த​​னை முழுவதும் ​மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கி​டைக்கும் என்பதாக இருந்தது. அவனது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்​லை'' என்றார் பீர்பால்.

''அப்படியானால் யார் மீது தவறு?'' என்று வினவினார் அக்பர்.

''மன்னர் ​பெருமா​னே! தவறு நம்மீது தான். ஏ​​னெனில் நாட்டின் நலன் கருத் பல நல்ல ​செயல்க​ளைச் ​செய்யும்​போது மக்களில் சிலர் ​போற்றுவதும், சிலர் தூற்றுவதும் ந​டைமு​றையான விஷயம்தான். நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்​மைக்காக நாடாளும் மன்னராக இருக்க ​வேண்டு​மே தவிர, இப்படி​யெல்லாம் ​பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் வி​வேகத்துடனும் நாட்​டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்க​ளைப் ​போற்றுகின்றனர்'' என்றார் பீர்பால்.

பீர்பால் கூறிய​தைக் ​கேட்ட அக்பர், ''நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் ​பேசுவார்கள் என்பது ​தெளிவாகத் ​தெரிகிறது'' என்றார் மன்னர் அக்பர்.

நன்றி:கல்விதுளிர்

எழுதியவர் : முக நூல் (1-Dec-15, 8:12 pm)
பார்வை : 1654

மேலே