வெண்பா

ஆடுகின்ற கூத்திற்கு அர்த்தங்கள் ஆயிரமோ!
பாடும் பைங்கிளியாள் பார்வதி – உடனுறைய
நாடும் அடியவர்க்(கு) நன்மையே பெருகிட
தோடுடை செவியன்தாள் பணி!

காடேகி! கையிலே கமண்டலமும் ஏந்தி!
ஓடேந்தி உடனுறை உமையோடு – நீறணிந்த
நெற்றியோ(டு) நின்றாடும் சிவனாரை வணங்க
வெற்றி மேல் வெற்றியே!

அருந்தியது நஞ்சுதான் அமர்ந்த(து) தவத்தில்தான்
பொருந்திய(து) இடப்பாக உமைதான் – என்றும்
தில்லை ஆடலரசைக் கண்ணாரக் காண
எல்லையில்லா ஆனந்தம் இனிதே!

கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (1-Dec-15, 10:40 pm)
பார்வை : 171

மேலே