என்னவளுக்கு ஓர் கடிதம்

அன்பே...!!!
நீ இந்த உலகில் எங்காவது
இருக்கிறாயா....
இல்லையா....
என்று
எனக்குத் தெரியவில்லை...!
ஒவ்வொரு விடியலும்
ஒவ்வொரு இரவிலும்
உன்னை
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...!!!
ஒரு நொடியாவது
நான் அழும்போது
என்னருகில்
ஆறுதலாய்
இருக்கமாட்டாயா
என்று என்னித்தவிக்கிறேன்...!!!
என் அழுகுரல்
உனக்கு மட்டும்
கேட்கின்றதா
என்று எனக்கு தெரியவில்லை...!!!
அப்படி கேட்டுத்தான்
என் கைகளாய் வந்து
என் கண்ணீரை
துடைக்கின்றாயோ..?
அதுவும் புரியவில்லை...!!!
உன்னை
என்னால்
தேடவும் முடியவில்லை...!!!
நீயும் எங்காவது
இருந்து
எனைப்போல்
அழுதுகொண்டே இருக்காதே....!!!
எனக்குத்தான்
இந்த உலகம் புரியவில்லை
எப்படி
தனிமையில் வாழ்வது என்று...!!!
நீயாவது
என்றும்
புன்னகையுடன்
இருக்க கற்றுக்கொள்..!!!
நான் காத்திருக்கும்
நிமிடங்கள் உனக்கத்தான்
ஆனாலும்
அதுவும் கண்ணீரில் மட்டுமே...!!!
உன்னிடம் நான்
வந்து சேரும் நாள்
என்றாவது
உள்ளதா என்றும் தெரியவில்லை...!!!
அப்படி ஒரு நாள் இருந்தால்...
என் உயிரை
உன்னிடம்
ஒப்படைத்து விடுகிறேன்..!!!
நீ பத்திரமாக வைத்துக்கொள்...!
என்னால் முடியவில்லை
தொலைத்து
விடுவேனோ
என்று பயமாக உள்ளது..!!!
என்னால்
உன்னிடம் வந்து
சேர முடியவில்லை என்றால்....
என் உயிரை
படைத்தவனிடமே
திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்....
எதற்காக...??
என்னிடம் கொடுத்தாய் என்று..!!!
இவன்
...பிரகாஷ்...