என்காதல் பயணத்தில் உன்நினைவு

நான்...!
இரவு பகல்
பாராமல்
தூங்காமல்
நான் எழுதிய
காதல் கடிதங்கள் யாவும்...!
அவளுக்கோ வெறும்
கற்பனை வரிகள் தான்........
சுட்டெரிக்கும் சூரியனும்
பகல் முழுவதும்
ஒளி வீசி
மாலையில் மங்கி
இரவின் மடியில்
சுழன்று
திசை மாறி
உறங்கச் சென்றுவிட்டாலும்...!
வெண்ணிலவு
இந்த
இருள் உலகை
ஆள வந்தாலும்...!
அதற்கு
நட்சத்திரங்கள்
பின்னிருந்து
மேலும் அழகுட்டினாலும்...!
எனக்கு
அவள் தான்
அழகாகத் தோன்றி
தூங்க விட மறுக்கிறாள்...!
ஆனாலும்
இருள் சூழ்ந்த
இரவாகியும்
அவள்
என்னை
சுற்றிச் சுற்றி
ஒளியாக வருகிறாள்... !
போ
என்றுச் சொல்லி
அவள் நினைவை
மட்டும்
தனியாய் விட்டுவிட்டு...!
கண்
உறங்கவும் மனமின்றி...!
என் மனம்
மட்டும்
அவளின்
நினைவுடன்
பயணிக்கின்றது...!
அவளின்
கண் பார்த்து
கைகோர்த்து
காதல் கதை பேசி பயணிக்காவிட்டாலும்
அவளின் நினைவுடன்
மட்டுமே
பயணிக்கத் தொடங்கிவிட்டேன்...!
அவளுடன்
நான்
பயணிக்கத் தொடங்கிய
நிமிடம்
எது என்று தெரியவில்லை...!
ஆனாலும்
அந்த நொடிதான்
என் வாழ்வின்
அர்த்தத்தை புரிந்து
கொள்ளத் தொடங்கினேன்...!
புரிந்து
கொள்ளத்
தொடங்கிய
போதே தெரிந்து
கொண்டேன்
இவையாவும்
ஒரு கனவுதான் என்று...!
நான்
என் வாழ்வே
அவள் தான்
எனப் புரிந்து கொண்டும்...!
அவளை தனியாய்
விட்டு பிரிந்து
செல்லத்தான் நினைக்கிறேன்...!
ஏனெனில்
என் சிறுமூளை
சிந்திப்பது என்னவோ...!
அவளின்
வாழ்வின்
பொன்னான
நொடிகளை
இந்த முட்டாளுக்காக
நான்
வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை...!
அவளுடன்
பயணம் செய்த
பாதையின் தூரம்
எவ்வளவு என்றுச்
சொல்ல தெரியவில்லை...!
அவ்வளவு
தொலைவு
அவளின்
நினைவுடன்
பயணித்து விட்டேன்...!
ஆனாலும்
இன்னும்
என் பயணம்
முடியவில்லை
என் கற்பனையில்........
ஆனால்
உண்மையில்
அவளுடன்
கைகோர்த்து
பத்து அடி
தூராப்பாதையைக்
கூட கடந்ததில்லை...!
இருந்தும்
என் ஆயுளின்
பாதியை
அவளின் நினைவுடன்
மட்டுமே
கடந்துவிட்டதாய்
என்னுள் என்னுகின்றேன்...!
அவளுடன்
நான்
சென்ற பாதையும் முடிவில்லை...!
நான்
மீதி பாதையை
அவளுடன் கடப்பதை
பற்றிய கவலையும் இல்லை...!
நான்
அவளுடன் கடந்து
வந்த பாதையை திரும்பி
பார்க்க வழியும் இல்லை...!
அவளுடன்
அன்பாக இருந்தாலும்
கோவமாக இருந்தாலும்
ஸ்பரிசித்த
நாட்கள் மட்டும்
என்றும்
என் நினைவில் கண்ணீராக......
என்னுள்
இருப்பதோ
நம் வாழ்க்கை என்ற நினைவு...!
அவளை
பொறுத்தவரை
உன்வாழ்க்கை
என்ற ஒருகனவு...!
இவையாவும் புரிந்தும்......
அவளின்
வாழ்க்கையில்
எனக்காக எந்த
ஒரு நொடியும்
இல்லாத பொழுதும்....
எனது வாழ்வின்
அனைத்து
நொடிகளிலும்
அவள் நினைவு
மட்டுமே என்னுள் உள்ளது.....
அவளுக்கோ
இது
புரியவும் இல்லை...!!!
எனக்கோ
புரிய
வைக்கவும் வழியும் இல்லை....!!!!!
--
with regards...
...~..akp..~...
இவன்
..பிரகாஷ்..