கன்னிக்குடம்

இது என்ன
பிரபஞ்ச
படைப்புலகம்
உணர்வற்ற
உத்வேகமயம்
முரண்பாடற்ற
முதல் சிருஷ்டிப்பு
செந்தமிழ் ததும்பும்
பண்புப்படிமம்
நவீனத்துவத்தின்
புனைவுமோகம்
சிருங்காரித்த
மொழி ரூபம்
மொத்தமாய் பருகிட
நிற்கும் களவுக்கனி
முயக்கத் தவிக்கும்
அந்திப்பிறை
மெல்லிடை தொங்கும்
கன்னி மண் குடம் ...

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (4-Dec-15, 8:04 am)
பார்வை : 225

மேலே