இப்போது

இந்தக் கடவுள் அந்தக் கடவுள்,
இதுதான் பெரிதென்று
எவன் பேச்சையோ கேட்டு
இரத்தம் சிந்தும் மானிடனே,
இப்போது பார்
இயற்கைச் சீற்றத்தில்-
எல்லாம் ஒன்றுதான்..

இடரில் இருப்பவனின்
இன்னல் தீர்க்க உதவுபவன்தான்,
இப்போது கடவுள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Dec-15, 6:55 am)
Tanglish : ippothu
பார்வை : 74

மேலே