நிவாரணமும் நிர்வாகமும்

ஆறாவது அறிவை தொலைத்துவிட்ட அரசாங்கம்,
அதிகாரம் பயனற்று போய்விட்ட நிலைமை.

அரசு செய்யும் உதவிகள் மிக மிக சொற்பம்,
கட்சிகாரர்களுக்கு அங்கங்கே முகாம்கள்,
அங்கே சமைக்கும் உணவை மேற்பார்வையிடும்
அரிய கடமையில் அரசு அதிகாரிகள்.அமைச்சர்கள்.

போட்டோவுக்கு போஸ் கொடுப்பது அவர்கள் வேலை,
பிரஷ் மீட்டிங்கில் பதில் சொல்வதில் அலட்சியம், ஏமாற்று வேலை.

இதுவா அரசாங்கத்தின் கடமை, அதிகாரிகளின் ஊழியம்.

தன்னார்வ தொண்டுகள் உணர்வில் எழுந்து உயர்ந்து நிற்க
தேவைகளுக்காக கையேந்தி என்மக்கள் உறைந்து கிடக்க
அங்கொன்றும் இங்கொன்றும் என நிவாரணப்பணிகள்
இப்படி இருக்கவா உன் காலில் விழ வேண்டும்?

IAS என்பது ஒரு உயரிய பணி, உணர்வு உன்னை உலுக்கும்
கை கட்டி சேவகம் செய்ய கட்டளைக்கு ஏன் காத்திருக்க வேண்டும்?
அரசு நிதி தர அமைச்சருடன் பேச்சு வார்த்தை வேண்டியிருக்கிறதா?
அம்மா சொன்னால் தான் அவனவன் அள்ளித்தந்ததில் கிள்ளிக்கொடுப்பான்.

இந்த லட்சணத்தில் 1000 கோடிக்கு காத்திருக்கிறீர்களா?
அது இன்னும் வரவில்லையா, ஹெலிகாப்டர் திரும்பியதும்
வங்கிக்கணக்கில் வந்திருக்க வேண்டுமே? வராமல் இருக்க முடியுமா?
தவிர நடிகர்கள் அறிவித்தது நாட்டுக்கு இப்போது பயன்படாமல்
எப்போது பயன்படும்?

போர்வை கேட்கிறார்கள், போத்தீஸ் கொடுத்திருக்கலாமே?
நடிகர்கள் அரசுக்கு கொடுப்பதற்கு பதில் அக்கௌண்டில்
கொடுக்கலாமே, ஆடி தள்ளுபடியில் இப்போது கொடுத்தால் கூட
உங்கள் பாவங்கள் தொலைக்கலாமே?

தமிழகமே துடிக்கிறது, லாரி லாரியாய் வந்து சேர்வதெல்லாம்
முறையாக பிரயோசனப்பட முன்வந்து நிர்வகிக்க எங்கே IAS?
அம்மா படம் போட்டு விநியோகம் செய்ய யார் சொன்னது?
கோவிலில் கூடி ஏன் கும்மி அடிக்கிறீர்கள்?

காணொளி காட்சிக்காக கடமை ஆற்றாதீர்கள்?
உங்களை விட கல்லூரி மாணவர்கள் கடமையாற்றுகிறார்கள்.
சோறு வேண்டாம் ஒன்னும் வேண்டாம், போர்வை போதும்;
தூங்கி 4 நாளாச்சு - புலம்பல் உங்களுக்கு தெரியவில்லை?

FACEBOOK, WHATSAPP வலைத்தளங்கள் செய்யும் சேவைகூட
நீங்கள் யாரும் செய்வதில்லை? MEDIA அரசியல் செய்கிறது,
பேச்சில் எல்லாம் பிண வாடை வீசுகிறது?
மியாட் ஆஸ்பத்திரிக்கு ஜெனரேட்டர் டீசல் கிடைக்கவில்லை,
இது ஏன் உங்கள் காமிராவில் பதிவாகவில்லை?

யாருமே எதுவுமே கொடுக்க வேண்டியதில்லை?
நிவாரணம் லாரிகளில் வரத்தேவையில்லை?
நடிகர்கள் எவ்வளவு என்பதெல்லாம் அவசியமே இல்லை?

கொஞ்சம் கருணையும் நிதியும் போதும்,
கருணாநிதிகள் கவர்ன்மென்ட் அதிகாரிகளாட்டும்,
கட்டமைப்பில் செய்யாதது இப்போதும் செய்யாவிடில்
செத்தவர்கள் ஆவி உங்களை சும்மா விடாது?

துடிப்பவர்கள் தவிப்பவர்கள் கலங்குபவர்களுக்கு எல்லாம்
கால தேவன் கர்மம் செய்யவில்லை, கவர்மென்ட் செய்கிறது.
காசுக்குக்காக பிழைப்பு நடத்தி ஊரை அடித்து உலையில் போட்டவர்கள்
கண் திறந்தாலே போதும்.

நடிகர் சங்க கூடத்தில் வேல் நிறுவனர் கொடுத்த வாக்குறுதியை
இன்று செய்யலாமே, பாருங்கள் அழுகுரலில் நடிப்பு இல்லையே?
SRM ஆஸ்பத்திரி அனாமத்து நிலம் தானே, அங்கிருந்து வர வேண்டிய
அனைத்து நிவாரணம் இங்கே ஏன் கிடைக்காமல் போனது?

யார் குற்றம்? எங்கிருந்து எடுக்கப்பட்டதோ
அங்கிருந்து தானே பெறப்படவேண்டும்?
அர்ச்சுனர்களுக்கு கீதையாய் கவி வேண்டுமோ?
கடமையாற்றுங்கள், கயவர்களே கைகளை கழுவுங்கள்,

அடிமைகளே அதிகாரம் உங்கள் கைகளில்,
பயனற்று கிடக்கின்றன,
மக்களுக்கு பலனில்லாமல்.

உங்கள் பண்பில்லாமல்.
எதுவும் இங்கே நிறைவுறாது?
கொஞ்சம் கடமையாற்றுங்கள்.

எழுதியவர் : செல்வமணி (5-Dec-15, 10:39 am)
பார்வை : 69

மேலே