தமிழ்நாடு
இயற்கையை அழித்தோம்
இயற்கையால் அழிகிறோம்
இன்னல்கள் ஆயிரம்
குறைகள் பல்லாயிரம்
குறை சொல்லுவதை குறையுங்கள்
குறை எங்கென்று நீக்க உதவுங்கள்
இன்று போல் என்றும் வேண்டாம்
இனிமேலாவது நல்லது வேண்டும்
நாளைய தமிழ்நாடு நல்லதாக
நல்லதை செய்வோம் நல்மனதோடு
பாடங்கள் கற்றோம்
படிப்பினை உணர்வோம்
வாழ்க தமிழ்நாடு
வாழ்க தமிழ்மக்கள்

