அடுத்த ஜென்மமும் என் அப்பா நீயே

என் விரல் பிடித்து
விடைகள் சொல்லி கொடுத்தாய்
பாசத்தை காட்டி
பக்குவம் சொல்லி தந்தாய்
நான் தவறு செய்யும்
தருணத்தில் அமைதியாய்
இருந்து உன் அன்பையும் என் தவறையும்
மெய்ப்பித்தாய்
சுட்டெரிக்கும் சூரியனாய்
இல்லாமல்
நூல் கொடுக்கும் ஊசியாய்
இருந்தாய்
தோல் கொடுக்கும் தோழனாய்
இருந்தாய்
உன் அன்பை
அனுபவிக்க ஒரு
ஜென்மம் போதாது
உனக்கு நிகர் யாரும்
இல்லை........நீயே அப்பா