அதிகம்

அந்த
மாம்பழக் குருவிக்குக்
கர்வம் அதிகம்
தன்னையே வருத்தி
தனியனாய் நின்று
குஞ்சுகளை. ...............
கண்டம் தாண்டியும்
கொண்டு போகாது விடியும்
மெய்யிருள்களை
தூசகற்றி ...............
கரைகின்ற வினாடிகளை
கரைத்து விட்டு
வேகாத வெயில்
தாங்காத உறைபனி
தெரியாத தேசம்
அறியாத உரைமொழி
கூடிருந்தும் இல்லாக்குலவல்
ஏங்காத் தனிமை
தூங்காத நடு நிசி
ஆனாலும்
அந்த மாம்பழக் குருவிக்குக்
கர்வம் அதிகம். .............

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (7-Dec-15, 5:25 am)
Tanglish : atigam
பார்வை : 192

சிறந்த கவிதைகள்

மேலே