நீ எதுவாகிறாய்
நீ எதுவாகிறாய்?
வெற்று மேகங்கள்
அழகழகாய்....
மழை மேகமோ...
கருப்பாய்...
நீ எதுவாகிறாய்?
கானகமே சொந்தம்
சிங்கத்திற்கு...
தெருக்களையே
தீர்மானிக்கும்
எல்லையாய்...நாய்கள்
நீ எதுவாகிறாய்?
மெல்லிய மூங்கில்
குழலாகும்.
தடித்த மூங்கில்
தகனத்தைக் கூட்டிவரும்!
நீ எதுவாகிறாய்?
வெறுங்கல்லோ
மிதிக்கும் படியாகும்
உளிபட்ட கல்லோ
சிலையாகும்
நீ எதுவாகிறாய்...?
நீ எதுவாகிறாய்?
நீயே முடிவு கொள்!
கே. அசோகன்
நன்றி பிரதிலிபி
வலைத்தளம்