பூமித தாய்

பூமித் தாய் !!!!
____________
அவள் தாய் அல்லவா ?
அதனால் பொறுத்திருந்தாள்...

பொறுமையை சோதித்தாய்
பொங்கி எழுந்தாள்...

பூமிக்கு பாரம் தந்தாய்
பூ மாறி பேய் மழை பெய்தது

பூமியை பிளந்தாய் கட்டிடங்கள் எழுப்ப
பூட்டிய வீடும் பிளந்தது பேய் மழையால்

விளை நிலங்கள் பெற வேண்டிய தண்ணீர்
வீனாகிப்போனதடா

தாகம் தீர்க்க குடி நீர் இல்லை
தானாகப் புரண்டோடியது வீதியில்

புண்ணியம் செய்துவிட்டோம் என மழை பெய்ததா
பாவங்கள் செய்திருப்பின் வெள்ளம் பெருகியதா?

ஏழை எவன் ? பணம் வைத்திருப்பவன் எவன்?
ஏளனம் செய்யாதே ! எல்லோரும் ஒன்றுதான்....

ஓடுகிறது எங்கும் தண்ணீர்...
ஓயவில்லையே ..."தண்ணீர் தண்ணீர்" என்ற கூக்குரல் ....

பெய்த மழை .....

தாகம் தீர்க்கவில்லை
விவசாயத்தை உயர்த்தவில்லை
விலை வாசியை குறைக்கவில்லை
பட்டினியை போக்கவில்லை
நளிந்தோரை வாழ வைக்கவில்லை ....

எனினும்.....

மனித நேயத்தை காட்டியது..
ஜாதி மத பேதமில்லை என உணர்த்தியது..
சிறு துளி பெறு வெள்ளம் என கற்பித்தது..
வீழ்ச்சியிலும் மீள நம்பிக்கை கொடுத்தது
கை கொடுக்கும் தெய்வங்களை சுட்டி காட்டியது.....

இந்தப பாடம் போதுமடா மனிதா...
உணர்ந்து நடை போடு....

ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி






....

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (8-Dec-15, 4:07 pm)
பார்வை : 298

மேலே