பெருமைப்படுகிறேன் நானும் ஒரு சென்னைவாசி என்பதில்

மதச்சார்பு அற்ற நாடு இந்தியா என்பதை விட
மதச்சார்பு அற்ற நகரம் சென்னை என்று
சொல்லிடவே பெருமைபடுகிறது என் இதயம்!
ஜாதி, மதம், இனம் கடந்து பொழிந்த மாமழையே
உனக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
நீ பொழியாமல் பொய்திருந்தால்
சென்னை மக்கள் மதச்சார்பு அற்றவர்கள்
என்பது தெரியலாமே போய் இருக்கும் இந்த உலகிற்கு!
ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு மறந்து
ஜாதி மதம் கலைந்து
ஒரு தட்டில் உணவுண்ண வைத்து விட்டாய் எங்களை!
ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்
சாதிக்க முடியாத ஒன்று!
உதவி கரம் நீட்ட எத்தனை இளைஞர்கள்
உயிரின் மதிப்பை புரிய வைத்து விட்டாய் எங்களுக்கு!
நானும் ஒரு சென்னைவாசி என்பதில் பெருமைப்படுகிறேன் இன்று!
ஆயிரம் புயல்கள் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நாங்கள்
எங்கள் இணைந்த கைகள் பிரியாது இனி ஒருபோதும்!
வந்த வழியே திரும்பி போய்விடு புயலே
இல்லையேல் நீ போராடி தோற்று போய்விடுவாய் எங்களிடம்!

எழுதியவர் : Narmatha (8-Dec-15, 3:34 pm)
பார்வை : 113

மேலே