அவங்களுக்கு அதுதான்
................................................................................................................................................................................
பளிங்காக கரை நிறைத்து
கூவி ஓடியது அது......
சாக்கடைக்குள் என்னென்ன?
வீடு, வீட்டுச் சாதனங்கள், துணிமணிகள்,
மளிகைப் பொருட்கள், நோட்டுப் புத்தகங்கள்...
ஆவணங்கள்.. கூட
அம்மாவின் படமும்..!
உயிரில்லாத,
சாவி கொடுக்கும் பொம்மைகள்
பாக்கியம் செய்தவை..!
செய்யவும் முடியாது
செய்வதையும் பொறுக்காது
அடித்துப் பிடுங்கி
ஸ்டிக்கர் ஒட்டத் தேவையில்லையல்லவா..!
இவர்களுக்குப் பேரிடர்
தோட்டத்தில் துயில்கிறது..!