கடவுளின் கடிதம் எனக்காக
![](https://eluthu.com/images/loading.gif)
காலம் கடந்து வரும் காற்றைப்போல..
உன் காதல் என்னைத் தீண்டியது மெல்ல..
வேண்டாம் என்று நான் வெறுத்த வேளையில்..
வேண்டும் என்று விரைந்து வந்தவள் நீ..
விதியென்று ஒன்றிருந்தால்..
விரும்பிய உன்னுடன் நான்..
விடைபெறாமல் வழி தொடர்வேன்..
வேண்டாம் என்று நான் நினைத்தால்..
வேண்டி நீ அணுகினாலும்..
வெறுத்து உன்னை விலக்கிடுவேன்..
என் கோபத்தின் இருப்பை நீ அறிவாய்..
என்றும் என்னுடன் நீ தொடர்வாய்..
நானின்றி நீயேது..??
பசுவின்றி கன்றேது..??
இமையின்றி கண் ஏது..??
நீயின்றி நானிருப்பேன்..??
நாளும் உன்னை நினைத்திருப்பேன்..!!
என்றும் என்னுடன் நீ இருப்பாய்..!!
உன் இருப்பு என்னுள்ளே..
என் இருப்பு உலகிலில்லே..
நீ அறியா உன் வழியில்..
வழித்துணையாய் நான் வருவேன்..
என் இருப்பை உணரா நீ..
ஊரோடு உறைந்திருப்பாய்..
உன்னுடன் நீ இருக்கும்
உன்னதமான வேளையில்..
நம்முடன் நாம் இருப்போம்..
என்னில்(என்னுள்) நீ உள்ளாய்..!!
உன்னுள் நானே
உள்ளேன் என்று நீ
உணர்ந்தால்
உற்சாகத்துடன்
உழலுவாய்..!!
உன்னில் நானும்
உள்ளேன் என்று நீ
உறைத்தால்
உள்ளம்
ஊசலாடும்..!!
உண்மைதனை
உணராமல்..!!
என் உடமை
எனக்கே உரிமை
என உரைப்பவன் நான்..!!
என்னிடம்
என் உடமையை
எனக்கும் உரிமையென
நீ கொடுத்தால்
ஏற்க மறுப்பேன்..!!
உன்னை மாற்ற நினைப்பேன்..!!
என்னுள் வாழ உரைப்பேன்..!!
எப்போதும்
உரைப்பதுபோல்
இப்போதும்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
என்றுரைக்காதே..!!
கிருஷ்ணனே
உனக்கு அர்ப்பித்த
மடல் இது..!!!
உணர்ந்து
புரிந்து
தெளிந்து கொள்..!!