நேசங்களில்

நேசங்களில் - சில
நேசங்களில் - சில
நேரங்களில்
நாசங்கள் தொலைந்திடக் கண்டேன்!
கவலைகள் கரையக் கண்டேன்!
வாய் பேச்சறியா உயிர்கள் கூட
வார்த்தைகள் கோர்க்காத ஆறுதல்
அள்ளி வழங்கக் கண்டேன்!
உணர்வென்ற ஒன்றை அறியா
உன்னத இயற்கைக் கூட
உதட்டுக்குள் புன்னகை பூக்க
உதவக் கண்டேன்!
கலைகள் கூட
கணக்கின்றி துணையாய்
தாங்கிடக் கண்டேன்!
எதையும் தந்து வாங்கிட
இவை எதுவும்
நிபந்தனை விதிப்பதில்லை!
நேசங்கள் பூக்க
மனதில் இரக்கம்
மட்டும் போதும்
எங்கும் மலரும் நேசம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (10-Dec-15, 9:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 54

மேலே