மாலை

மாலை கட்டி,
மாலை கட்டி
மாலை நேரத்தில்
பிள்ளையாருக்குப் போட்டே
பூவை அவள்
பேரிளம் பெண்ணானாள் - ஆனால்
கல்யாண மாலை போடவில்லை!
கல்லுப் பிள்ளையாரும்
கணக்கின்றி சுமக்கின்றார்!
கழுத்தில் மாலைகளை - அவள்
கழுத்தென்னவோ வெறுமையோடே!
உதிரிப்பூக்களும்
உறவு கொண்டன மாலையில்
உதிர்ந்தே போயிடுமோ இவள் ஆசைகள்...?
மாலைக்கு பூக்கள் வாங்கிய காசில்
மணமே முடித்திருக்கலாமோ ...?
மனங்கள் பூத்திருந்தால் - உன்
மணநாளும் மலர்ந்திருக்கும்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (10-Dec-15, 9:35 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 49

மேலே