உணர்தலும் புரிதலும் - உதயா

இதுவரை நீ பயணித்த பாதைகளில்
மீண்டும் ஒரு நினைவு பயணத்தை
உணர்ச்சிகளால் உறைந்து தொடர்ந்துபார்
உமக்கு கிட்டிய பிரிவினையும்
கிட்டுவதற்காக காத்திருக்கும் புரிவினையும்
தகர்த்தும் முறித்தும் விடலாம் ...!

உன்னை அவ்வப்போது வசந்தங்களுக்கு
சிறைஎடுத்தவள்(ன்) அவள்(ன்) என்றால்
பிரிந்தே ஆகவேண்டுமென்ற மணித்துளிகளில்
அவள்(ன்) இல்லாத நாள்பொழுதுகளை நினைத்துப்பார்
அந்த நினைவிலே சில கண்ணீர் துளிகளை
அவளு(னு)க்காக எண்ணி அவள்(ன்) முன்னே சிந்திப்பார்
உன் வாழ்வு மீளா வசந்தத்தினுள் அகப்பட்டிருக்கும் ...!

நீ நடந்து செல்லும் பாதையில்
உன்னை விரோதியென நினைத்து
உன்மேல் ஆரா குரோதமுரைடவன்
உன் பார்வையில் கடந்துச் சென்றால்
ஆணவமில்லா நகைதனை உன்னிதழில் பூட்டிப்பார்
அவனுள்ளும் ஈரம் நட்பிற்காக கசிய தொடங்கும் ...!

உன் நண்பனுக்கு
நீ செய்வத உதவியை
பிறரிடம் சுட்டுவதை விட
உன் நண்பன் உனக்கு செய்த
உதவினைச் பிறரிடம் சுட்டிப்பார்
உன் நட்பில் முளைவதாய் இருந்த நச்சும்
நட்பிற்காக புது இலக்கணம் எழுது ...!

ஒரே ஒருமுறை நல்மங்கையாய்
எண்ணதினுள் வாழ்த்துபார்
மனதார உறைந்து உணர்ந்துபார்
அடுத்த நொடிமுதல் உன்விழிகள்
உன் துணைவியை தவிர்த்து
அனைத்து மங்கையரின் விழிதனிலே
பார்வையை தொடங்கி முடித்துவைக்கும் ...!

எதை எதையோ தேடிக்கொண்டே
உன் பாதைகளின் கிளைதனை
பெருக்கிகொள்ளும் கணப்பொழுதில்
சிலரின் கண்ணீர் தடங்களை அழித்துபார்
உன் வாழ்வின் இறுதிநாட்களில் நான்கு நபராவது
உனக்காக பிரிவு வேதனையில் மூழ்கி கிடப்பார்கள் ...!

எழுதியவர் : உதயா (11-Dec-15, 12:14 pm)
பார்வை : 730

மேலே