என்னருகே நீ வேண்டும்

இமைகள் மூடாமல் இரவில் விழிக்கின்றேன்,
மனமிது ஓயாமல்,
வருந்தித் தவிக்கின்றேன்!!

இனிதாய் இரவில் கனவுகள் வேண்டும்,
உன்னுடன் வாழ்ந்த நினைவுகள் வேண்டும்!

ஆசை வாழ்கை வெறும் கனவாய்ப் போகுமோ?
அன்பே நம் காதல் வெறுப்பாய் மாறுமோ!?

உனைப்பிரிந்து வாழும் இரவுகள் நீளுதே,
உன் அன்பை வேண்டி மானும் வாடுதே!

உன் மேனியைத் தீண்டிட ஆசைகள் கூடுதே..
பெண்மையே நீ இன்றி..
வாழ்வில் வெறுமை தான் சூழுதே!!

உன் சிறுபிள்ளை சிரிப்பினை நான் காண வேண்டுமே!
உன் அழகிய பேசென்னை இரசித்திடத் தூண்டுமே!

ஒரு சேர நாம் பேசி சிரிப்பது எந்நாளோ?
இரவினில் என் தூக்கம் திருடவே வந்தாலோ?

உனைத்தீண்டி பல நூறு முத்தங்கள் தர வேண்டும்!
எபோழுதும் என்னருகே காதலியே நீ வேண்டும்!!

எழுதியவர் : நேதாஜி (12-Dec-15, 7:32 pm)
Tanglish : ennaruge nee vENtum
பார்வை : 314

மேலே