காதலிக்காக காத்திருக்க வேண்டியதில்லை - நல்ல கவிஞன்

கவிதைகள் கூன் போட்டு
விழுந்தாலும் நல்ல
கவிஞ்சனின் முதுகுத் தண்டு
வானை மட்டுமே பார்க்கிறது

சர்ப்பம் கூட
அர்ப்பமாகத்தான் தெரியும்
நல்ல கவிஞ்சனின்
கர்வம் படம் எடுக்கையில்

ஆகாயத்தில் கோட்டை
கட்டிவிட்டு
பாதாளத்தில் உருண்டு
கொண்டிருக்கும் பயித்தியக்காரர்கள்
இவர்கள்

இவர்களின் கை விறகுகள்
தீ பிடித்தெரிந்தால்
நல்ல ரசிகனுக்கு அது
குளிர்கால கதகதப்பு

காலடியில் நாய்க்குட்டி
போனாலே போதும்
காதலிக்காக காத்திருக்க
வேண்டியதில்லை
நல்ல கவிஞன் இடம்
கவிதைகள்

இவர்கள் விண்ணிலிருந்து
குதித்தவர்கள் இல்லை
புவியீர்ப்பு விசையை தாண்டி
விண்ணுக்கு குதிப்பவர்கள்

எழுதியவர் : கவியரசன் (14-Dec-15, 11:38 am)
பார்வை : 162

மேலே