இத்திக்கை கிழிப்போம்
(இந்த அண்டம் சிதறினும் அஞ்சமாட்டோம்)
பயங்களை எரிப்போம்,
எட்டி உதைப்போம்,
திசை எங்கும் விசிறி அடிப்போம்..
எங்கள் இரத்தங்கள் இன்னும் ஈனபடவில்லை
எங்கள் விரல்களின் தவங்கள் இன்னும் கொச்சை படவில்லை
அது சக்கை,சக்கையாய் இத்திக்கை கிழிக்கும்,
அட சின்ன உலகிது,சிட்ட...
சிட்டாய் தூர கவிழ்க்கும்
(-பயங்களை எரிப்போம்)
கொச்சை வழக்கங்களின் நிச்சய உலகிது..
இதன் சொத்தை
சுகங்களுக்குள் நாங்கள் இல்லை
நாங்கள் இன்று துணிவு பட்டோம்
இனி என்றும் இழிவுக்குள் இடர்படமாட்டோம்
அகண்ட வானே நின்னை போல் எங்கள் குணங்கள் திறக்கப்படட்டும்..
உன் நீடித்த வலிமையால் எம் மனங்களின் ஜிரங்கள் திறன்படட்டும்...