காதலியும் காதலனும்
நிலா:
நான் சுற்றுவது உன்னை மட்டுமே..
உன்னைப் பற்றுவது இறைவன் சித்தமே..
பூமி:
உன்னாலே உறங்காமல் யுகம் கழிக்கின்றேன்
தன்னாலே சுற்றிவந்துன் பக்கம் இருக்கின்றேன்
நிலா:
என்னிறம் என்னவென்று எனக்கு அறியவில்லை
உன்னிறமாய் ஆவேனோ என்று புரியவில்லை
பூமி:
மேகமுனை மறைத்தாலும் கோபம் வருவதில்லை
காற்றுத்தோழன் வந்திடுவான் அதனால் குறையுமில்லை
நிலா:
இரவில் பளிச்சிடுவேன் பகலில் மறைந்திடுவேன்
இருக்கும் நேரமெல்லாம் உன்னை ரசித்திடுவேன்
பூமி:
தேகம் சுடும்வேளை குளிர்ச்சி தருவதுநீ
வறட்சி ஆண்டாளும் ஆறுதல் அளிப்பதுநீ
நிலா:
இதயம் எனக்குவுண்டு அதுவும் உனக்குளுண்டு
உதயம் நிதமுமுண்டு உள்ளே மகிழ்ச்சியுண்டு
பூமி:
தோன்றிய நாள்முதலாய் என்னையே சுற்றுகிறாய்
வயதோ ஆகவில்லை அழகும் குறையவில்லை
நிலா:
இத்தனை சுற்றிவந்தும் என்கை பற்றவில்லை
மனிதன் மூளைபட்டு நோய்கள் பற்றிக்கொண்டாய்
பூமி:
நீயும் ஜாக்கிரதை உனையும் பற்றிடுவான்
நிதமும் அழுக்கேற்றி உன்முகம் சிதைத்திடுவான்
நிலா:
காதல் மொழிபேசி காலம் கடத்திடுவோம்
சேரும் நாள்நோக்கி வாழ்வை நடத்திடுவோம்
பூமி:
இதயம் சேர்ந்தபின்னே இனியும் கவலையென்ன
இமைகள் மூடிக்கொள்வோம் கனவில் வாழ்ந்துகொள்வோம்