அழியாத சுவட்டோசைகள்

அந்த வட்டப்பாதையில்
நடந்து கொண்டிருக்கிறேன் .
தொலைவிலே பூங்கா வொன்று தெரிகிறது.
அறிமுகமான நினைவலைகளை
மீளப்பெற ஆசை தோணுகிறது.
பெட்டி பெட்டியாய் அடுக்கப்பட்ட
பாத நடைப் பாதையில்
விழிகள் மீண்டு வந்து நிலை கொள்கிறது .
வசீகரமான வாழ்வின் பசுமைகள்
வரண்டு முற்றுப்புள்ளி வைக்கிறது.
நடை வேகமாகிறது - என்
நரை முடி ஒன்று தவண்டு
கடைவாயில் நுழைகிறது.
அந்த மஞ்சள் கொன்றை பூக்கம்பளத்தை
மிதித்த படியே நகர்கிறது
தள்ளாட்டக் கால்கள் - அடுத்துள்ள
அழகான கல்லறைகளின்
குவியல்களைத் தேடி......
எனக்கு என்னவோ அங்கு சென்றதும்
பெரும் பாரத் துன்பக் குண்டு
கீழே விழுந்தது .
அமைதி அடைகிறேன் !
ஆத்ம பலம் பெறுகிறேன்!
என்னையும் மீறி
சத்தமிடாதீர்கள் என சத்தமிடுகிறேன் !
பூங்கா வாய் மலர்த்திய
என் அம்மா உறங்கிக் கிடக்கிறாள்
எழுப்பி விடாதீர்கள் என்கிறேன் !
எதுவும் நடக்காதது போல் பிரமித்து நிற்கிறேன் !
அவள் சங்கீதம் மட்டும் இன்னும் இனிமையாக
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது ..............
-பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (15-Dec-15, 6:06 am)
பார்வை : 52

மேலே