சம்மதம் வேண்டுகிறேன்

என்ன தவம் செய்ததோ ?
உன் வீட்டு கண்ணாடி
உனை பார்க்க ...
மலர் உனக்கு தேன் சிந்துதோ ?
சூடும் வரம் தந்ததால் ....
கண்ணீர் கண்ணீர் சிந்தியதோ ?
உனை விட்டு எனை ஏன் வெளி ஏற்றுகிறாய் என்று ....
உனை விட்டு
பிரிய வேண்டும்
என்றால்
உயிரை விட்டு விடுவேன் கண்மணியே ...
காதலே
உள்ளம்
உயிர்
அதில்
நீ ...
காதல்
சாகும்
என்றால்
உயிரை தந்து
உன் உயிரை காப்பேனடி ...
ஏழு மலை
ஏழு கடல்
தாண்டினால்
ஒரு குகை ...
குகைக்குள்
ஒரு கிளி கூண்டு ..
கூண்டுக்குள் ஒரு கிளி
அந்த கிளிக்குள்
இருக்குமாம்
அரசனின் உயிர்...
ஆனால்
என் அரசியே ...
என் உயிர்
எங்கேயும் தேட வேண்டாம் ...
இங்கேயே இருக்கிறது ...
கட்டிக் கொள்ள ஆசை
சம்மதம் தருவாயா...