ஆண்கள் ஜொள்ளர்கள்தான் இருப்பினும்

ஆண்கள் ஜொள்ளர்கள்தான்! இருப்பினும்...


ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.
அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு.

ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், "ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.

அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.

கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.
பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.

நன்றி - வாரமலர் - ஐ.ஹரிணி, சென்னை.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (15-Dec-15, 10:16 pm)
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே