தோழியின் பாதுகாப்பு கவசம்

தோழியின் பாதுகாப்பு கவசம்!
---------------
அரசுடைமை வங்கி ஒன்றில், வேலை பார்க்கும் நான், சமீபத்தில், தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரியும், பால்ய சிநேகிதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்.
"ஆபீசில், சபலிஸ்டுகளை எப்படி சமாளிக்கிறாய்?' என்று, சிரித்துக் கொண்டே கேட்டேன்.
"அந்த விஷயத்துல நான் சமர்த்து. ஆபீசுல பத்து வருஷமா, பழந்தின்னு கொட்டை போட்டவங்களெல்லாம், என்னைப் பார்த்து, புருவம் உயர்த்தி, ஆச்சரியப்படற அளவுக்கு நான் பாப்புலர்...

"எப்படின்னு கேக்கறியா? காலைல ஆபீசுக்கு போனவுடனே, "இன்னிக்கு பஸ்சுல, ஒரு காலிப்பய என்கிட்ட, சில்மிஷம் பண்ணினான். செருப்பை கழட்டி, "பளார் பளார்'ன்னு அறைஞ்சேன். அலறி, அடிச்சிட்டு தப்பிச்சோம், பிழைச்சோம்ன்னு இறங்கி ஓடிப் போயிட்டான்'ன்னு எல்லாருக்கும் கேட்கும்படி, டுபாக்கூர் விடுவேன்.

"இந்த மாதிரி, அவ்வப்போது யாருக்கும் சந்தேகம் வராதபடி, "கப்ஸா' அடிச்சி விடுவேன். இதை உண்மையின்னு நம்பி, "எம்மா...அவளா நெருப்புல்லா'ன்னு சொல்லுவாங்க அந்த மாதிரியான சபல ஆசாமிகள் உட்பட, யாரும் என்கிட்ட வாலாட்ட மாட்டாங்க...' என்றாள் பெருமையாக!
வேலைக்கு செல்லும் சகோதரிகளே... நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்த மாதிரி பொய் சொன்னாலும் பரவாயில்லை... நெருப்புங்கற இமேஜை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதுவே, பாதுகாப்பு கவசமாய் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும்.

நன்றி - தினமலர் - சி.கலாராணி, புதுச்சேரி.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (15-Dec-15, 10:17 pm)
பார்வை : 78

மேலே