குருவே சரணம்

குருவின் வார்த்தைகளால்
யாரும் இதுவரை
எதையும் அடைய முடிந்ததில்லை.

ஆனால்
அவரது மௌனத்தை
புரிந்துகொள்ள முடிந்தால்
நாம் அதை
அடைந்தவர்களாகி விடுகிறோம்.

குருவின் ஆசி பெற
அவரின் கண்களைப் பார்த்தாலே
போதுமானது.

எழுதியவர் : செல்வமணி (16-Dec-15, 10:15 am)
Tanglish : GURUVE saranam
பார்வை : 214

மேலே