நிறம் மாற்றுகிற பச்சோந்திகள்

...............................................................................................................................................................................................

அந்தப் பச்சோந்தி
ரத்த சிவப்பாய் மாறியபோது
பச்சை மரமும் சிவப்பாய் போனது...

அந்த பச்சோந்தி
கருப்பாய்க் கடந்தபோது
வானத்து சூரியனும் கருத்தது..

பச்சையாய் நிறம் மாற...
பாசி படிந்த கருமேகங்கள்
அமில மழை பெய்தன..!

பச்சோந்திகள்
அதிகாரத்தில் அமர்ந்து
லஞ்சம் பெற்றபோது
தடுக்கிற கெட்டிக்காரத்தனம் நிறம் மாறி விட்டது...
இது பிழைக்கிற வழி...

ஊழலில் கொடி நாட்டியபோது
உதற வேண்டிய இதயம்
என் பங்கு எங்கே என்றது..
இது பின்தொடருகிற வழி..

இயற்கையைக் கூறு போடுவது..
இயலாமையில் விளம்பரம் தேடுவது..
பொய் பாசாங்கு..,
போதையை கடை விரிப்பது
எல்லாமே இப்படித்தான்..

நிறம் மாற்றுகிற பச்சோந்திகள்... ஜாக்கிரதை
இவை சவக்குழி தோண்டி
உங்களைத் தள்ளி விடுகின்றன....
நீங்கள் தப்பிக்க
ஒரு நாலு பேரைத் தள்ள வேண்டும்..
உங்களுக்குப் பிரியமானவரை
பிறர் தள்ளலாம்..

சவக்குழியை மூடிவிட்டு,
தோண்டுபவனை தண்டித்தால்
எல்லாம் சரியாகிவிடும் என்பது புரிகிறபோது....
இறுதி வந்து விடும்...

எழுதியவர் : அருணை ஜெயசீலி (17-Dec-15, 12:01 pm)
பார்வை : 166

மேலே