நிலவே ஏமாற்றி விடாதே
கிளைத்துப் பரம்பிய
நம்பிக்கை வானில்
தேய்ந்து வளரும் நிலவுக்கு
இளைத்துப் போய் விடாமல்
இன்னும் காத்திருக்கும்
இந்த இருட்டு. ....
நீ
என்னுள்ளிருந்து எங்கே
ஒளித்திருக்கிறாய். ..
என்னை ஒளிர்த்துபவளே
இன்னும் சில நாட்களில்
இறந்து விடச் சொல்கிறாயா. .
வா. .
வானம் ஏமாந்து விடாமல். ..
உன் செல்லக் குழந்தைகள்
சிரித்துக் கலகலக்க வீடெடுத்து
விண்ணில் வாழ வேண்டும். ...
- பிரியத்தமிழ் -