கன்னக் குழிதனைக் கண்டு

மானென்பே னாடும் மயிலென்பேன் நீந்திடும்
மீனென்பேன் பார்வையோ மின்னலென்பேன்- தேனென்பேன்
தென்றல் வருடிட தெம்மாங்குப் பாட்டிசைப்பேன்
கன்னக் குழிதனைக் கண்டு

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Dec-15, 10:10 pm)
பார்வை : 127

மேலே