அவனும் அவளும் --- தரவு கொச்சகக் கலிப்பா
ஆசிரிய விருத்தத்தி லருமையாகத் தொடங்கியது
மாசிலாதக் கலிப்பாவின் மகத்துவத்தை இயம்புதல்போல்
வாசமிலா மலர்களுமே வனவாசம் மணங்கமழ
ஆசிகளைத் தலைவனுடன் தலைவியுமே தருகின்றார் .
ஆகவே
இனிமை பொங்கிட இயல்பி னில்லறம்
கனிவாய் மாறிட கடவுள் தந்த
ஆசிகள் கலிப்பா ஆசிரிய விருத்தம்
மாசுகள் கலைந்திடும் மனந்தரும்
மலரென தலைவனும் தலைவியும் வருதலே .!
( நேரிசை ஆசிரியச் சுரிதகம் )