மையலும்சமையலும்

மையலும்….சமையலும்
அரிசியைக் களைவது
சமையல்!
காதலரசியைக் களைவதோ!
மையல்!
வெங்காயத்தால் கண்ணீர்
சமையல்!
தாமதத்தால் கண்ணீர்
மையல்!

கனிகள் வேகின்றது
சமையல்!
இதயம் வேகின்றது
மையல்!

தண்ணீர் கொதிக்கிறது
சமையல்!
தவிப்பால் தகிக்கிறது
மையல்!

சமையலில் அகப்பட்டோர்
சாமான்யமாய்
வெளிவரார்
மையலில் மாட்டினவர்
மீண்டே வரமாட்டார்கள்!

பரிமாறப்படுவது!
சமையல்!
பரிமாறப்படுகிறது
மையல்!

மையலிலும்…சமையலிலும்
சேதமாவது ஓரெழுத்தே!

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (19-Dec-15, 6:04 pm)
பார்வை : 83

மேலே