நட்பே உலகமாய்

நட்பே உலகமாய் அதில் நண்பனே அனைத்துமாய் இருந்துவிட்டேன் .....!
ஆனால் அந்த உலகத்தில் அவதரித்த மூன்று ஆண்டுகளிலேயே நான் மீண்டும் இறந்துவிட்டேன் ....!
சுழலில் சிக்கிய காற்றாடியாய் வானில் இன்று தனியே பறந்துவிட்டேன் ...!

கல்லூரி ....
நான் யார் என்பதை எனக்கு அறிமுக படுத்தியது ....!
நட்பு எனும் உறவை அதில் புகுத்தியது ....!

கடவுளிடத்தே....நம்பிக்கை இல்லை அந்த இயற்கையிடம் கேட்கிறேன் ....!
கல்லூரி நாட்களை அல்ல ...அதில் நான் விடுப்பு எடுத்த நாட்களை மட்டும் திரும்ப தா என்று ....!

உறவுகளால் என்னை வெறுத்த காதல் ...
தொலைவுகளால் என்னை மறந்த நண்பன் .....
இவை இரண்டும் என்னை கொல்கிறது ......!
அதனை இக் கவிதை சொல்கிறது ......!

ஒருவரிடம் அல்ல ஒவ்வொருவரிடமும் கேளுங்கள் ...அவரது கல்லூரி வாழ்கை என்னவென்று ....
கண்களில் நீர் சொட்ட ஒரு காதலையும் ..... தன் நட்பையும் பற்றி கூறுவார் .....!

அன்று நான் விழுகையில் என்னை தாங்கிய தோள்கள் .....!
அழுகையில் என் கண்ணீர் துடைத்த பல கைகள் ...!
இன்று என்னை தனியே விட்டுவிட்டது ........

நண்பனே உன்னை காண விறைகிறேன்.....!
என் கண்ணீரை பரிசாய் தருகிறேன் .....!
இன்று இக் கவிதையில் உன்னோடு விடை பெறுகிறேன் .....!

எழுதியவர் : PREMKUMAR (20-Dec-15, 2:53 pm)
Tanglish : natpe ulagamaay
பார்வை : 149

மேலே