எண்ணப்படாத நாட்கள்--முஹம்மத் ஸர்பான்

நெஞ்சுக்குள்
இதயம் புதைத்தேன்.
மாரூக்குள்
எட்டி உதைத்தாள்.
***

கண்களால்
பார்வை தீண்டினேன்.
இமைகளோடு
கனவுக்கு தீயிட்டாள்.
***

இதயப்பாத்திரத்தில்
நினைவுகளை உணவாக்கி
காதல் விருந்துண்பேன்.
நிலா மண்டபத்தில்
***

கடிகார முட்கள்
உடைந்ததடி
உயிர் உடலை
கடந்து சென்றதால்
***

கையில்
மலர்ந்த
ரேகை போல்
நானென்ற
வேரில் கிளை
கண்ட விருட்சம் நீ
***

சேற்றில் ஒளிந்த
வைரம் போல்
மெளனமென்ற
பூவிதழில்
வெடிக்காத சொல்லும் நீ
***

மழைத்துளிகளுக்கு
குடை பிடித்தால்
உயிர்த்துளிகளில்
காற்றாய் வந்து
முத்தமிடுவேன் உன்னை
***

ஓடக்கரை நீ
சென்றால் மீன்களும்
கண்ணாடி தேடுகின்றது
தங்கள் அழகை பார்ப்பதற்கு
***

இதயத்தின் நரம்பெடுத்து
தாலி செய்தேன்
என்புகளை கொடுத்து
மெட்டி வாங்கினேன்.
***

நந்நாள்(நல்+நாள்)
தேடி உயிர் துறந்தேன்
காதல் நாட்காட்டியில்
எண்கள் இல்லாததால்
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (20-Dec-15, 5:44 pm)
பார்வை : 169

மேலே