எங்கும் இல்லை

எங்கும் இல்லை
காடுகளைக்
களைந்தோம்
சோறு சமைக்க
காணவில்லை
மழை!

கழனிகளைக்
காணாமற் செய்தோம்
வீடுகள் கட்ட!
விளைச்சல் இல்லை
சாப்பிட!‘

கனிகளை
மறந்தே
கண்டதைத் தின்றோம்
வீட்டுக்குள் அழைத்தோம்
வியாதிகள!

உண்மை
உழைப்பினை
ஏளனம் செய்தோம்!
வாழ்வில்
வளம்தான் இல்லை!

பணத்திடம்
பாசம் வைத்தோம்!
பந்தங்கள்
பட்டுப்போயின!

இயற்கையை
எதிர்த்தோம்
இன்பம்தான்
எங்கும் இல்லை!
--- கே. அசோகன்.
நன்றி- கல்கி-30-12-2001

எழுதியவர் : கே. அசோகன் (20-Dec-15, 7:46 pm)
பார்வை : 79

மேலே