பெண்மைக்காய் குரல் கொடுப்போம்

வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்

அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்

மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.

மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.

இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில் ஆண்மைக்கு மட்டும் பெண்மைக்கு
நரகம் கொத்திக்கும் நெருப்பை போல் பல
அரக்கன் நடக்கும் தரையில் அவள் பாதம் வேண்டாம்.

வேலை செல்வது அவள் உரிமை புதுமை பெண்
கவலை தருவது காலம் அளிக்கும் மதிப் பெண்
காலை மலரும் கூந்தலில் அழகாய் சிவக்கலாம்
மாலை வந்தால் அது அவளால் கசக்க பட வேண்டும்

புரியும் என்றும் நம்புகிறேன் உணர்ந்தால் நலமே!!
தெரிந்த காட்சிகள் அழகு என்றால் எங்கும் ஆபத்து
விரிந்த குடைக்குள் மழைத்துளிகள் வரக்கூடாது
சிரித்த கன்னத்தில் கண்ணீர் துளி விழக்கூடாது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (20-Dec-15, 11:26 pm)
பார்வை : 1463

மேலே