என் மரணம் உன் பிரிவு
என்
கவிதைக்கும்
அறிவுக்கும்
நரை விழுந்த படியே
காத்திருக்கிறது.
என்
முக ரேகைகள்
முதுமை படர்ந்த
கோலக் கீறலாய்
பதிந்து கிடக்கிறது.
என்
கவிதைக்குப் பிறந்த
குழந்தைக்கவி ஒன்றின்
மழலைக்குரல் கேட்டு
மௌனித்துப் போனது.
உன்
பிரிவுக்காய்
எழுதிய கவிதையின்
தலைப்பு
என் மரணம் என்பது
உனக்கு எப்படிப் புரியாமல் போனது ?
- பிரியத்தமிழ் -