நினைத்தாலே வலிக்கும்

நம்
நினைவுகளை வடிக்கும்
கண்ணீர்த் துணிகளை
முறுக்கி காயப்போட்ட கீறல்களாக
கிழிசல் போட்ட
சல்லடைகள் ஆகும்
என் தாய்க் கவிதைகள். ...

யாருமே அறியா
என் கண்ணீர்த் துளிகளை
இந்த பாழ் வெளியில்
தெளித்து விட்டால்
முற்றுப்பெறாத என் வரிகள்
உனக்கான குறிப்புக்களில்
முடிவடையும். ...

நீ அறிக்கை செய்யாத
என் ஆழ் மனதின்
அந்தரங்க முடிவுகள்
கனவுகளில்
கவிண்டு போன
தருணங்களாக அழியும். ...

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (22-Dec-15, 8:21 am)
Tanglish : Ninaithaale VALIKUM
பார்வை : 76

மேலே