நமக்கு ஏன் வம்பு

சப்தங்களால்
மட்டுமே
உற்று நோக்கும்
சமூகம்,

உரக்கமான
சப்தத்தை கேட்டு
ஒதுங்கி செல்கிறது,
லேசாக முகம் கோணி.

அமைதியைக்கூட
சாதாரணமாக
எடுத்துக்கொள்வதில்லை,
ஏனோ சற்று அச்சத்துடன்
மிகுந்த கவனத்துடன்
சில கேள்விகளுடன்..

ஆனால்,
ஊமைகளின்
மௌனங்களையும்
சம்மதங்களாகவே
பார்க்கிறது சமூகம்!,

அருகில் சென்று
ஆதரவுக்கு கை நீட்டாது,
தயக்கமின்றி
கடந்து செல்லும்,
"நமக்கு ஏன் வம்பு?" என.

எழுதியவர் : செல்வமணி (22-Dec-15, 6:48 pm)
Tanglish : namakku aen vambu
பார்வை : 137

மேலே