அந்த ஒரு காட்சி

அந்த ஒரு காட்சி.......!
அதுதான்....
சிவநேசன் நாடார் மனதில்
ஒரு பொறியை உண்டாக்கியது!
பெரிய லட்சிய அக்கினிக்கான பொறி அது!
பிரீமியர் நிறுவனத்தை நிறுவும் லட்சியம்!
நிறுவி விரிவுபடுத்தும் லட்சியம்!
அந்தக் காட்சிதான் என்ன....?
மும்பையில் காட்சி தந்த உற்பத்தி ஆலை!
ஒரு கட்டிடத்தின்
மூன்றாவது மாடியில் காட்சி தந்த ஆலை!
அறுநூறே சதுர அடியில் ஆட்சி செய்த ஆலை!
சென்னை வரை வணிக அலை அனுப்பி வென்ற ஆலை!
காட்சி உருவாக்கியது சிந்தனைப் பொறியை!
" சதுர அடியோ அறுநூறு! மாடியோ மூன்றாவது!
அதே போல முயன்றால் நம்மாலா இயலாதது?"
எண்ணமே குரலாகி மீண்டும் மீண்டும் மனதொலிக்க
லட்சிய அக்கினி மனமுழுதையும் ஆட்கொண்டது!
சரியான ஒரு தருணத்தில்
எழுநூறே சதுர அடியில்
சொந்த ஆலை துவக்கினார்!
இன்று.....?
சமையலறை உபகரணங்கள் சந்தையில்
ஸ்திரமாக நிலைத்து விட்டார்!
வணிகத்திலும் வென்று விட்டார்!
ஏற்றுமதிக்கும் சென்று விட்டார்!
இந்த வெற்றி நமக்கு சொல்லும் பாடமென்ன?
ஒரு காட்சிதானே இவருக்கு வெற்றிவழி காட்டியது!
வெற்றி பெற்றோரின் பாதைக் காட்சி
அதை தரிசித்தோர்க்கும் வெற்றி தரும்!
அது எளிதில் விளங்கும் பாடம்!

எழுதியவர் : ம கைலாஸ் (22-Dec-15, 8:29 pm)
Tanglish : antha oru kaatchi
பார்வை : 84

மேலே