மன வலிமை
உச்சம் தொட
உனக்கு தேவை
மன உறுதி,
கடந்ததை திரும்பி பார்த்தால்
கால் இடறி விடும்;
கவனம் கொள்ள,
மன ஊக்கம்.
தூரம் பற்றி கவலை கொள்ளாது
தொடர்ந்து பயணம் செய்ய
துணை,
மன வலிமை!
மனம்
ஒரு வனம்,
பாதையில்,
பயம் பற்றினால் சறுக்கும்,
வளம் நோக்கினால் மட்டுமே
நலம்,
வாழ்க்கை தரும் சுகம்;
வரம் வேண்டி வருவதில்லை
தினந்தோறும் இன்பம்,
அது வாய்க்க நீ எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும்
இருக்க வேண்டியது
..வாய்மை,
....நேர்மை,
.......மன கூர்மை.