அசோக்கு அசோக்கு

அசோக்கு, அசோக்கு.

யார அசோக்கு அசோக்குனு கூப்பிடறீங்க?

எங்க பையனத்தாங்க கூப்படறேன்.

நீங்க அஷோக்-ங்ற பேரத் தப்பா அசோக்குனு தப்பா உச்சரிக்கறீங்களே.


என்னங்க செய்யறது அந்தப் பேர சரியாச் சொல்லமுடியலீங்களே.

உங்க பிள்ளை பேர சரியா உச்சரிக்கக் கூட முடியல. அப்பறம் எதுக்குங்க உங்க பையனுக்கு அந்தப் பேர வச்சீஙக?

எங்க குடும்பமே மூணு தலமுறையா தீவிர சினிமா ரசனை உள்ள குடும்பமுங்க. நாங்க சினிமாவ்லெ வர்ற பேரத்தான் எங்க குடும்ப் பிள்ளைங்களுக்கு வப்போமுங்க.

சரி. அஷோக் -ங்கற பேருக்கு என்ன அர்த்தம்னாவது தெரியுமா?


....ங்.. அதென்ன அர்த்தமோ நாங்க என்னத்தக் கண்டோமுங்க.

சரி நாஞ்சொல்லறென். அஷோக் -ன்னா துன்பமின்றி-ன்னு அர்த்தம். உச்சரிக்கமுடியாத பேர பெத்த பிள்ளைக்கு வச்சு அந்தப் பேர தப்புத் தப்பா சொல்லறதவிட ஒரு நல்ல தமிழ்ப் பேர வச்சிருக்கலாமே.


அதெப்பிடீங்க முடியும் ? நம்ம தமிழ் நாட்லே எல்லாரும் சினிமாவ்லே வர்ற பேரத் தான பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. நாங்க தமிழ்ப் பேர வச்சா எல்லாரும் எங்களைப் பத்தி என்ன சொல்லுவாங்க?

சரி.. சரி. உங்களக் கொற சொல்லி என்ன பிரயோசனம். பெரிய படிப்புப் படிச்சவங்களே சினிமா ரசனையிலே மூழ்கி இந்திப் பேருங்களத்தான் அவுங்க பிளைங்களுக்கு வைக்கறாங்க. பாவம் எழுதப் படிக்கத் தெரிந்த தீவிர சினிமா ரசிகரு. நீங்க என்ன செய்வீங்க?

==============
Ashok = without sorrow or sadness
----------
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயரின் பொருள் அறிய.
------------
நன்றி: ஓவியம்: வெங்கி 'தி இந்து' தமிழ் நாளிதழ்: 23-12-15.

எழுதியவர் : மலர் (23-Dec-15, 10:53 pm)
பார்வை : 132

மேலே