இதயம் துடிக்கிறது

இதயதிற்கு ஆறுதல் சொன்ன கண்ணின் கண்ணீருக்கு
ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னைத்தவிர.....!
என் மறதிகூட மறந்ததடி
உன் நினைவுகளை மறக்க நினைக்கயில்.....!
குறும்படமாய் உன்னை மறக்க நினைக்கிறேன்...
நினைவுகள் தொடர்கதையாய் துரத்திக்கொண்டிருக்கிறது....!
இன்று என்னை தொலைத்துவிட்டு இலையுதிர் காலத்தில்
பூக்களை தேடினால் நிச்சயம் கிடைக்கமாட்டேன்...!
அழுதுகொண்டிருக்கிறேன்
நீ என்னை விட்டுச்செனறாய் என்பதற்காக அல்ல...
என்றோ ஒரு நாள் என்னை இழந்துவிட்டோமோ என்று அழப்போகிறாய் என்பதற்காக...!

எழுதியவர் : சந்தோஷ் (24-Dec-15, 12:13 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 96

மேலே