விழிகளில் என்ன மௌனமா

‪#‎விழிகளில்‬ என்ன மெளனமா....??
ஒவ்வொரு இரவும் கண்ணீர்ச்சரலுக்கிடையே துவங்குகிறது
நினைவுகளில் நீ இருப்பதால்...
கனவுகளில் உன் புன்னகை சத்தம் கேட்பதால்.....!
உனக்கு ஞாபக மறதி அதிகம் என்று நினைக்கிறேன்....
அதனால் தான் எளிதில் மறந்துவிட்டாயோ...
என்றோ ஒருநாள் எதிரெதிர் பயணத்தில் உன்னைப் பார்க்கநேரிட்டால்...
உன் விழிகள் எங்கேயோ பார்த்த உருவம் என்று உதடுகளை புன்னகை செய்யச்சொல்லுமா...
இல்லை..எவனோ ஒருவனேன்று மெளனத்தை மட்டும் அடயாளமாக்கிச் செல்லுமா...
உன் விழிகளில் என்ன மெளனமா....

எழுதியவர் : சந்தோஷ் (24-Dec-15, 12:16 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 95

மேலே